ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

மோடி வசம் ரகசிய போன்! ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மாவின் பிரமாணப்பத்திரம்!

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி வசம் ரகசிய போன் இருப்பதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் அரசு சட்டவிரோதமாக கண்காணித்த இளம்பெண்ணுடன் பேசுவதற்காக மோடி அந்த போனை பயன்படுத்தியுள்ளார்.


சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கட்ச் மாவட்ட கலெக்டராக பணியாற்றியவருமான பிரதீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ பெயரில் மோடி ஃபோன் கனெக்ஷன் எடுத்திருந்தார்.ஃபோன் நம்பர் தொடர்பான விபரங்களை உச்சநீதிமன்றம் கைப்பற்றவேண்டும் என்று பிரதீப் சர்மா பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மோடிக்கும், இளம்பெண்ணுக்கும் இடையேயான உறவை தான் அறிவதால் மோடி அரசு தன்னை வேட்டையாடுவதாகவும், பொய் வழக்குகளை ஜோடிப்பதாகவும் குற்றம் சாட்டி இதனை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று பிரதீப் சர்மா ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். இது தொடர்பாகத்தான் அவர் தற்போது பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக