சனி, ஏப்ரல் 12, 2014

மாநிலத்திற்கு சேவை அளிக்க இயலாதவர்கள் மத்தியில் என்ன சாதிக்கப் போகிறார்கள் எஸ்டிபிஐ மாநில செயலாளர் கேள்வி

தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகளில் நற்சேவை அளிக்க இயலாதவர்கள் மத்திய¤ல் என்ன சாதிக்கப் போகிறார்கள் என அதிமுகவை எஸ்டிபிஐ கட்சி கேள்வி எழுப¢பியுள்ளது.

நெல்லை தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட் பாளர் முகம்மது முபாரக் பணகுடி, வள்ளியூர், துலுக்கர்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவ ரை ஆதரித்து கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் பேசியதாவது: தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவதாக தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 

ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு வாட்டி வதைக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் மாநிலத்திற்கு நற் சேவைகளை அளிக்க இயலாதவர்கள் மத்தியில் என்ன சாதிக்கப் போகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. எஸ்டிபிஐ கட்சி அனைத்து தரப்பு மக்களுக் கும் தொடர்ந்து சேவை யாற்றி வருகிறது. ஜாதி, மத பேதமற்ற சமூகம் உருவாக ஆட்டோ ரிக்ஷா சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, பொதுச் செய லாளர் ஜாஹீர் உசேன், துணைத் தலைவர் ஷாகுல் உஸ்மானி, ராதாபுரம் தொகுதி தலைவர் மஜீத் ஆகியோர் உடன் சென் றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக