ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் இயங்கு 13 ஏஜன்சிகளில் இணைவதற்கு ஃபலஸ்தீன் ஆணையம் அளித்த விண்ணப்பத்தை ஐ.நா அங்கீகரித்துள்ளது. இத்தகவலை ஐ.நாவின் 193 நாட்களின் பிரதிநிதிகளிடம் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுதலைச்செய்ய மறுத்துள்ள சூழலில் இந்த நடவடிக்கையை ஐ.நா எடுத்துள்ளது.அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கை ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான பேச்சு வார்த்தையில் ஃபலஸ்தீன் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.ஆனால், இஸ்ரேல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் பேச்சுவார்த்தை முடங்கியது.இச்சூழலில் ஐ.நா ஏஜன்சிகளில் இணைய ஃபலஸ்தீன் விண்ணப்பித்தது.
ஐ.நா ஏஜன்சிகளை தவிர ஜெனீவா கன்வென்ஷனின் உறுப்பினராகவும் ஃபலஸ்தீனுக்கு அனுமதி கிடைத்துள்ளது.இதற்காக சுவிட்சர்லாந்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இஸ்ரேல் தனது திமிரான நடவடிக்கைகளை தொடர்ந்தால் மேலும் பல சர்வதேச ஏஜன்சிகளிலும், ஒப்பங்களிலும் பங்கு சேர விண்ணப்பம் அளிக்கப்படும் என்று ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈத் எரகாத் தெரிவித்தார்.
இதனிடையே ஃபலஸ்தீனை பழிவாங்கும் நோக்கில் ஃபலஸ்தீனுக்கு உரிய வரி வருமானத்தில் பிடித்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது ஃபலஸ்தீனின் பொருளாதார துறைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக