புதன், ஏப்ரல் 16, 2014

மல்லிப்பட்டினத்தில் கலவரத்தை தூண்டிய பாஜக!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் மீன்பிடித் தொழிலை செய்துவருகின்றனர்.
சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் இப்பகுதி மக்களிடையே அரசியலுக்காக பாஜகவின் தஞ்சை வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் வன்முறையை தூண்டி கலவரத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.
தஞ்சை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கருப்பு (எ) முருகானந்தம் ஆவார். இவர் மீது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மதக் கலவரம், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் கருப்பு மல்லிப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்பதை அறிந்த அந்த பகுதி மக்கள் முன்னரே காவல்துறையிடம் அவர்களுக்கு இந்த பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என மனு அளித்துள்ளனர். ஏற்கனவே காவல்துறை காலை 8:30 மணிக்கு பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று காலை 10:30 மணிக்கு வந்த பாஜக வேட்பாளருக்கு அனுமதி மறுத்தனர்.
ஆனால் கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளூர் பிரமுகர் ஒருவர் துணையுடன் போலீஸையும் மீறி அவர்கள் மல்லிப்பட்டினம் ஊருக்குள் சென்று கோஷம் போட்டும், பள்ளிவாசல் அருகே பிரச்சனையை ஏற்படுத்த அவர்கள் முனைந்தபோது, அப்பகுதி மக்கள் ஊருக்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீசார் பிரச்சனை வரும் என்பதால் அனுமதி இல்லை என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பாஜக வேட்பாளருடன் வந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வன்முறையை தூண்டியுள்ளது.
இந்த வன்முறையில் அப்பகுதி சிறுபான்மை மக்களின் கடைகள், வாகனங்கள், படகுகள் சேதப்படுத்தப்பட்டன. பலருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதையடுத்து கலவரத்துக்கு காரணமான பாஜகவினரை விட்டுவிட்டு முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை பிரச்சாரத்திற்கு வரக்கூடாது என பல இடங்களில் மக்கள் கறுப்புக்கொடி காட்டியும், ஊருக்குள் வரவிடாமலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒவ்வொருவருக்கும் ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை ஆகும். அதேப்போன்ற ஒரு நிகழ்வுதான் இங்கு நடந்தது. ஆனால் ஜனநாயக உரிமைப்படி ஊருக்குள் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பாஜகவினரே கற்களை வீசி வன்முறையை தூண்டியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த பகுதி மக்களின் சொத்துக்களும், வாகனங்களுமே அதிகமாக சேதமடைந்துள்ளன. மீனவர்களின் 4 படகுகளை எரித்தும் சென்றுள்ளனர். இதையடுத்து இரவுப்பொழுதில் முஸ்லிம் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி கடலுக்குள் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். 
 எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர்கள் அப்துல் சத்தார், அமீர் ஹம்சா மற்றும் வழக்கறிஞர்கள் கொண்ட குழுவும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிபி அனுஷ் ஜெய்ஸ்வால் அவர்களை நேரில் சந்தித்தும் மேற்க்கண்ட புகாரை அளித்தனர்.
இதையடுத்து நாளை மாநில தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் அவர்களை சந்தித்து இதுத்தொடர்பாக புகார் அளிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக