கடந்த 1996 ஆம் ஆண்டில் போர்னியோ தீவுகளுக்கு வடமேற்கே உள்ள புருனே காடுகளில் 342 வகையான உயிரினங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது. தற்போது அங்கு 464 வகைகள் காணப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை போர்னியோவில் இருப்பதில் பாதி மடங்கு என்றும்
கணக்கிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்நாட்டில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வினை எற்படுத்தும் வண்ணம் அந்நாட்டின் தபால்சேவை அலுவலகம் நேற்று வண்ணத்துப்பூச்சிகளின் பின்னணியிலான தபால்தலைகளை வெளியிட்டது. அந்நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நேற்று இந்த தபால்தலைகள் விற்பனைக்கு வந்தன. இவற்றின் விலை 1.20 புருனே சென்ட், 10 புருனே சென்ட் மற்றும் ஒரு முழு தொகுப்பு 1.30 புருனே டாலர்கள் என்று அரசு தகவல் தெரிவித்தது.
உத்தியோக கவர், தபால் முத்திரைகளுடன் கூடிய கவர் மற்றும் தபால்தலை முத்திரைக் கையேடு போன்றவையும் 1.30 டாலரிலிருந்து 4.80 டாலர் வரையிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக