புதன், ஏப்ரல் 16, 2014

குஜராத் போலீஸ் தங்களை 3-ஆம் தர போலீஸாகவே கருதுகிறது -12 மாநில போலீஸ் டி.ஜி.பிக்கள் புகார்!

நாட்டின் மிகச்சிறந்த போலீஸ் என்று ஹிந்துத்துவா சக்திகள் பெருமை பேசும் குஜராத் போலீஸ், மாநில மக்களைப்போலவே இதர மாநிலங்களுக்கு தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.”குஜராத் போலீஸ் எங்களை அவமதிக்கிறது. தொந்தரவு செய்கிறது.
மோசமாக நடந்துகொள்கிறது” என்று உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் 12 மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பா.ஜ.க அளித்த புகாரைத்தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி மத்திய அரசு சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.18
மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பிக்கள் மற்றும் துணை ராணுவப் படையினரின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.நரேந்திரமோடி பிரதமர் அல்ல. ஆனால், குஜராத் போலீஸ், சிறப்பு பாதுகாப்பு குழுவைப்(எஸ்.பி.ஜி)போல தலையிடுகிறது. ஆனால், எஸ்.பி.ஜியின் தொழில்நுட்ப திறன் குஜராத் போலீசுக்கு கிடையாது என்று மாநிலங்களின் போலீஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
மோடி பிரச்சாரம் செய்யும் பகுதிகளுக்கு வரும் குஜராத் போலீஸ், தங்களை 3-ஆம் தர போலீஸாகவே கருதுகிறது என்று முக்கிய குற்றச்சாட்டு எழுந்தது.பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பி கூட இக்குற்றச்சாட்டை கூட்டத்தில் எழுப்பினார் என்பது கவனிக்கத்தக்கது. பீகார், தமிழ்நாடு போலீசும் கடுமையான குற்றச்சாட்டை குஜராத் போலீஸ் மீது தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து குஜராத் போலீஸ், இதர மாநில போலீஸுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் குஜராத் போலீஸ் மீதான இதர மாநில போலீஸ் தலைவர்களின் குற்றச்சாட்டிற்கு அம்மாநில ஏ.டி.ஜி.பி(உளவுத்துறை) பிரமோத்குமார் பதிலளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக