செவ்வாய், ஏப்ரல் 15, 2014

மல்லிப்பட்டினத்தில் வன்முறை! – கலவரத்தை தூண்டும் பாஜக! காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் கிராமத்தில் இன்று பாஜக வேட்பாளர் முருகானந்தம் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார்.
காவல்துறை அனுமதி மறுத்திருந்தும் அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு, தொழுகை நேரத்தில் வழிபாட்டிற்கு இடையூறாக கோஷமிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெறுப்பை உமிழும் பாஜக பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி தராததோடு நிறுத்தி விடாமல், அப்பகுதிக்கு அனுமதிக்காமல் போதுமான பாதுகாப்பையும் தந்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டுகிறேன்.
பொதுமக்கள் மீதும், வாகனங்கள், கடைகள் மீதும் தாக்குதல் நடத்திய வேட்பாளர் கருப்பு முருகானந்தம் உட்பட வேட்பாளரோடு வந்த கலவரக்காரர்கள் அனைவரையும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் நடைபெறாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துவதுடன், மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் வன்முறை ஆயுதத்தை பயன்படுத்தி ஆதாயம் தேட முயலும் பா.ஜ.க வை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக