சனி, ஏப்ரல் 12, 2014

ஜசோதா பென் எனது மனைவிதான்: உண்மையை ஒப்புக்கொண்டார் மோடி!

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜசோதா பென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ,பியில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திருமணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என மோடி தெரிவித்துள்ளார். மோடியின் மனைவி ஜசோதா பென் ஆசிரியை. இவர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
மோடி தமக்கு திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. 2001,2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது திருமணம் பற்றி குறிப்பிடாமலே வந்தார் மோடி.
திருமணமாகாத தான், ஊழலுக்கு எதிராக போராட தகுதியுள்ளவன் என்ற மோடியின் அறிக்கையின் பொய் முகம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. மக்களவை தேர்தலில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப்பத்திரத்தில் மனைவியைக் குறித்த தகவல்களை தெளிவாக பதிவுச் செய்யாவிட்டால் வேட்பாளருக்கான தகுதி ரத்துச் செய்யப்படும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது.திருமணம் குறித்து உண்மையை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் கட்சிஏற்கனவே கோரியிருந்தது.
“ஒரு பெண்ணை பின் தொடர்ந்து, சொந்த மனைவியை அநியாயமாக தவிர்த்த மோடியை நாட்டின் பெண்கள் நம்பமுடியுமா? என்று திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.பெண்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில் சிறுவயதில் மோடியைக்கொண்டு கட்டாயத்திருமணத்தை குடும்பத்தினர் நடத்தியதாக அவரது சகோதரர் சோம் பாயி மோடி கூறுகிறார்.
பல வருடங்களுக்கு முன்பு அபியான் என்ற குஜராத்தி மாத இதழ் மோடியின் திருமண விவகாரத்தை வெளிக்கொணர்ந்தது. ஆனால், இது தனிப்பட்ட விஷயம் என்று ஜசோதாவும், குடும்பத்தினரும் தெரிவித்திருந்தனர். கடந்த பெப்ருவரி மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஜசோதாவின் பேட்டியை வெளியிட்டது. மோடி இப்போதும் தனது கணவர் என்று 62 வயதான ஜசோதா பேட்டியில் தெரிவித்திருந்தார். திருமண உறவு 3 ஆண்டுகள் தொடர்ந்ததாகவும், 3 மாதங்கள் தாங்கள் இணைந்து இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதன் பிறகு மனைவியை தவிக்க விட்டுவிட்டு மோடி வீட்டை விட்டு சென்றார். மோடி கைவிட்டாலும்,ஜசோதா தனது முழுப்பெயரை ஜசோதா பென் நரேந்திரமோடி என்றே எழுதிவருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக