ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 23 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 31 பேர் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சின்னங்களும் புதன்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்கியது. இம்மாதம் 5ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வேட்பு மனுக்கள் பரிசீலனை 7ஆம் தேதி நடைபெற்றது. வேட்பு மனு வாபஸ் பெறும் நாளான புதன்கிழமை இருவர் தங்களது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 31 பேர் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் களம் இறங்கியுள்ளனர். இவர்களில் 23 பேர் சுயேச்சைகளாவர். இத்தேர்தலில் மொத்தம் 14,17,580 பேர் வாக்களிக்க உள்ளனர்.
போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:(சின்னம் அடைப்புக் குறிக்குள்)அ. அன்வர்ராஜா (அதிமுக-இரட்டை இலை) ஆர்.டி. உமா மகேசுவரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-கதிர் அரிவாள்)து. குப்புராமு (பா.ஜ.க-தாமரை)கே. சிவகுருநாதன் (பகுஜன் சமாஜ் பார்ட்டி-யானை)சு. திருநாவுக்கரசர் (இந்திய தேசிய காங்கிரஸ்-கை)எஸ். முகம்மது ஜலீல்(திமுக-உதயசூரியன்)பி.டி. அரசகுமார் (தேசிய பார்வர்டு பிளாக்-மோதிரம்)எம்.ஐ. நூர்ஜியாவுதீன் (எஸ்.டி.பி.ஐ. ஆட்டோ ரிக்சா)அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இவர்களைத் தவிர 23 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க. நந்தகுமார், தேர்தல் பொதுப் பார்வையாளர் சுபாஷிஸ் மொய்ட்ரா ஆகியோர் சுயேச்சைகளுக்கு புதன்கிழமை சின்னங்களை ஒதுக்கீடு செய்தும் அறிவித்துள்ளனர்.
போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் விவரம்:(சின்னம் அடைப்புக் குறிக்குள்)1. எஸ். அண்ணாமலை (பானை)2. யு. அமிர்தலிங்கம் (தேங்காய்)3. எஸ். அய்யப்பன் (ஸ்கூல் பேக்)4. இ. அல்லாபிச்சை (கேஸ் சிலிண்டர்)5. அ. அழகுமீனா (விசில்)6. ஆர். கண்ணதாசன் (மெழுகுவர்த்தி)7. என். காசிராஜன் (பெல்ட்)8. கே. கோகிலா (கத்தரிக்கோல்)9. ஆர். கோபால் (ரம்பம்)10. எஸ். சசிக்குமார் (பட்டம்)11. ஜி. சாத்தையா (பெண் குழந்தையின் கௌன்)12. எம். சுப்பையா (பேட்)13. ஆர். தியாகராஜன் (டெலிவிஷன்)14. பி. தென்னரசு (மின்விசிறி)15. எஸ்.எஸ். பாலகிருஷ்ணன் (வெட்டரிவாள்)16. சி. பால்பாண்டி (செருப்பு)17. பி. பெரியசாமி (மின்கம்பம்)18. எஸ். மணிவாசகம் (ஏழு இறக்கைகளுடன் கூடிய பேனா நிப்பு)19. ஆர். முருகேசுவரி (கப்பும் சாசரும்)20. எஸ். மூக்கையா (அலமாரி)21. கே. ரவி (பலூன்)22. எஸ். வெற்றிவேல் (டார்ச் லைட்)23. ஆர். வேல்ச்சாமி (கண்ணாடி டம்ளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக