சிறந்த கிரிக்கெட் வீரராக விஸ்டன் விருதுக்கு தவான் தேர்வாகியுள்ளார். கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தவான் கடந்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார். 2013ல் இவர் 26 ஒருநாள் போட்டிகளில் 1162 ரன் குவித்துள்ளார். 5 சதமும் விளாசியுள்ளார். இவரைத்தவிர ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ரோஜர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, லண்டனில் இன்று விஸ்டன் புத்தகத்தின் 151வது பதிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தில் ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் அட்டைப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. மும்பைஸ்டேடியத்தில் சச்சின் விடை பெற்று செல்வது போன்ற புகைப்படம் விஸ்டன் புத்தகத்தின் அட்டைப்படமாக அலங்கரித்துள்ளது. இந்திய வீரர் ஒருவர் விஸ்டன் புத்தக அட்டையில் இடம் பெறப் போவது இதுவே முதல் முறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக