செவ்வாய், ஏப்ரல் 15, 2014

ஈழத்தமிழர் பிரச்னைகளில் காங்கிரஸ், பாஜவுக்கு எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லை

எஸ்.டி. பி.ஐ. கட்சி தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யூ. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தாசமக்கானில் நடந்தது. இதில், வடசென்னை தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் நிஜாம் முகைதீன் பேசியதாவது: பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும். மக்கள் பிரச்னையை பற்றி கவலைப்படாமல் பதவிக்காக சேர்ந்திருக்கும் சந்தர்ப்பவாத கூட்டணி. எனவே, தமிழக மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஈழத்தமிழர் பிரச்னையை முன்னிறுத்தி வாக்குகளை பெற பாஜ நினைத்தது. 

கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தற்போது நடிகர்களை விளம்பர பொருளாக்கி வாக்குகளை பெறும் தந்திர முயற்சியில் அக்கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஈழத்தமிழர் பிரச்னை, இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை, காவிரி பிரச்னைகளில் கொள்கை விஷயத்தில் காங்கிரஸ், பாஜவுக்கு எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லை. 

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஆண்ட, ஆளுகின்ற கட்சியால் முறையான அடிப்படை வசதிகளை கூட மக்களுக்கு செய்துதர இயலவில்லை. உழைக்கும் வர்க்கத்தினர், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் நிறைந்துவாழக்கூடிய வடசென் னை பகுதியானது தொடர்ந்து வஞ் சிக்கப் படுகிறது. இதனை சரி செய்வதற்கு எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு மாற்று அரசியல் பேரியக்கம். 
எனவே, எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் பாரூக், மாநில துணை செயலாளர் பல்லாவரம் அன்சாரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல், பால், எஸ்.டி. பி.ஐ. மாவட்ட பொது செயலாளர் கரீம், செயலாளர் கோபிநாத் ஆகியோர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக