ஒருநாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், முதல்வர் அகிலேஷ் யாதவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தலைநகர் லக்னெüவில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தத் தகவலை சமாஜவாதி கட்சித் தலைவர் அனுப்ரியா படேல்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பில்கேட்ஸ் - அகிலேஷ் சந்திப்புக்கு முன்னதாகவே, "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை' உறுப்பினர்களும் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தியிருந்தனர்.போலியோ ஒழிப்பு, பிற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வதற்கு பில் கேட்ஸ் ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது.
குறைப் பிரசவ சிகிச்சை, பிரசவ கால சிகிச்சை, ஊட்டச்சத்து, குடும்பக் கட்டுப்பாடு, குழந்தைகள் நலம் ஆகியவை அடங்கிய ஐந்து அம்சத் திட்டத்தை பில் கேட்ஸின் அறக்கட்டளை உத்தரப் பிரதேசத்தில் செயல்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக