புதன், ஜனவரி 29, 2014

வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பு உயருகிறது; தேர்தல் கமிஷன் முடிவு



















பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பு, கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்தன.

அதை ஏற்று, செலவுத்தொகை உச்சவரம்பை உயர்த்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. விலை குறியீட்டு எண்ணுக்கு ஏற்ப, உச்சவரம்பை உயர்த்தும் வழிமுறையை தேர்தல் கமிஷன் வகுத்து வருகிறது. அநேகமாக, ரூ.56 லட்சமாக உச்சவரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும்.
இதுபோல், சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பையும் தேர்தல் கமிஷன் உயர்த்த உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக