வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஜனவரி 16–ந்தேதி மத சுதந்திர தினமாக கடைப்பிடிக்கப்படும்
என ஜனாதிபதி ஒபாமா நேற்று அறிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க மக்கள் அனைத்துவித நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இன்மை ஆகியவற்றை தழுவியவர்கள். கிறிஸ்தவர், யூதர், இந்துக்கள், இஸ்லாமியர், புத்தமதம் என பலதரப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இது நமது கலாசாரத்தை வலுப்பெற செய்துள்ளது. என்னுடைய நிர்வாகம் மத சுதந்திரத்தை வீட்டிலும், உலக அளவிலும் பாதுகாக்க துணை நிற்கும். அதுபோல உலகநாடுகளும் மத சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக