புதுடெல்லி,
புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 20 கோடி நன்கொடை பெற்றதாகவும், மேலும் பணம் தேவையில்லை என்றும் அறிவித்ததாக தகவல் வெளியாகியது. இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி மறுத்தது. மேலும், அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு புகார் எழுப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பாக கோட்டில் பதில் அளித்துள்ள மத்திய அரசு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், அவர்கள் பணம் பெற்றது குறித்தான தகவலை பகிர்ந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக