புதுடெல்லி,
அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பெருமளவு வரி ஏய்ப்பு
செய்து, கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் போட்டு
வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தக் கறுப்புப்பணத்தை மீட்டு கொண்டு
வர வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது.இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம்ஜேத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில் அவர், வெளிநாட்டு வங்கிகளில் பலரும் ரகசியக் கணக்குகள் வைத்துள்ளனர். நாட்டைக் கொள்ளையடித்து பல்லாயிரக்கணக்கான கோடி சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ளது. இப்படி வெளிநாட்டு வங்கிகளில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக