காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்ராம் விமானப்படை தளத்தில் 88 பயங்கர கைதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சிறையில் இருந்து விடுவிக்க ஆப்கான் முடிவு செய்துள்ளது. ஆனால், இவர்கள் அபாயகரமானவர்கள், வெளிநாட்டு படையினரை கொன்றதில் இவர்களுக்கு பங்கு உண்டு, இவர்களை தொடர்ந்து சிறைக்காவலில்தான் வைத்திருக்க வேண்டும் என்று கூறி, விடுவிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையடுத்து அவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யுமாறு உளவுத்துறையை ஜனாதிபதி ஹமீது கர்சாய் கேட்டுக்கொண்டார். அதன்படி ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 88 பேர் மீதான வழக்குகளை ஆய்வு செய்துவரும் தீர்ப்பாயத்தின் தலைவர் அப்துல் ஷகார் தத்ராஸ், ‘‘88 கைதிகள் தொடர்பாக வழங்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டோம். அதில் அவர்களை தண்டிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவர்களை விரைவில் விடுதலை செய்வோம்’’ என கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக