புதன், நவம்பர் 30, 2011

மைக்கேல் ஜாக்சன் மரணம் அதிக மருந்து கொடுத்த டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperலாஸ்ஏஞ்சல்ஸ் : மைக்கேல் ஜாக்சனுக்கு அதிக மருந்து கொடுத்து அவரது மரணத்துக்கு காரணமாக இருந்த டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ‘கிங் ஆப் பாப்’ என்று புகழப்பட்டவர் பாடகர் மைக்கேல் ஜாக்சன். 2009-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இறந்தார். புரபோபால், லோராஜிபாம்
போன்ற மருந்துகள் அதிகம் எடுத்துக் கொண்டதால்தான் அவருக்கு மரணம் நேரிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் கான்ராட் முர்ரே (58) முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த 7-ம் தேதி முர்ரே குற்றவாளி என லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட் அறிவித்தது. அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி மைக்கேல் பாஸ்டர் நேற்று அறிவித்தார். ஜாக்சனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து முர்ரே தவறியதாலும், மருத்துவ ஆராய்ச்சி செய்வது போல ஜாக்சனை பயன்படுத்தியதாலும் அதிகபட்ச தண்டனை விதித்ததாக நீதிபதி கூறினார். தீர்ப்பு வழங்கியபோது, மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினரும் கோர்ட்டில் இருந்தனர். மைக்கேல் ஜாக்சனின் 81 வயது தாயார் கேதரின் கூறும்போது, ‘இந்த தண்டனை எனது மகனை திரும்ப கொண்டு வந்து விடாது. முர்ரேக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நன்றி’ என்றார். நன்னடத்தை காரணமாக முர்ரே 2 ஆண்டுகளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது என வக்கீல்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக