புதன், நவம்பர் 30, 2011

குலுங்கியது பிலிப்பைன்ஸ் பயங்கர நில நடுக்கம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperமணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை 8.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு மாகாணமான ஜாம்பேல்ஸ்சின் மேற்கு கடற்கரையையொட்டி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதிர்வு 6 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் தலைநகர் மணிலா
குலுங்கியது. உயரமான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வு அதிகம் உணரப்பட்டது. மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். புலாகான், பங்காசினான் ஆகிய மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இந்த நிலநடுக்கத்துக்கு பிறகு 3.1, 2.9, 3.8 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. அங்கு கடந்த 1990-ம் ஆண்டு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக