- மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நேற்று நடைபெற்ற போட்டிமிக்க 13வது பொதுத் தேர்தலில் திரு நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
- இந்தத் தேர்தலில் திரு நஜிப்பே தன்னை முன்னிலைப்படுத்தி நடத்திய தேர்தல் பிரசாரம் வீண்போகவில்லை.
- ஆளும் கட்சி மீது விரக்தியில் இருந்த இந்தியர், சீனர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நஜிப் மேற்கொண்ட பெரும் முயற்சி வீண்போகவில்லை.
- இம்முறை தேசிய முன்னணி, முதன்முதலாக வாக்களிக்கும் இளையர்களை அதிகம் ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கூட்டணிக் கட்சி கடந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
- தேசிய முன்னணி 134 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் கூட்டணி 80 இடங்களைப் பெற்றுள்ளது. சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் பலர் வைப்புத்தொகையை இழந்துள்ளனர். வாக்களிப்பு நேற்று பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 12,992,661 வாக்காளர்கள் அதாவது 80 விழுக்காட்டினர் எப்போதும் இல்லாத அளவில் மக்கள் ஆர்வத்தோடு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.3
திங்கள், மே 06, 2013
2013 மலேசிய பொதுத் தேர்தல் மீண்டும் ஆட்சியை பிடித்தது தேசிய முன்னணி !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக