திங்கள், மே 06, 2013

ஆக்கிரமித்த லடாக் பகுதியில் இருந்து சீனா வெளியேறியது!


இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் ஊடுருவிய சீனப் படைகள் வாபஸ் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இந்தியாவும் அங்கு நிலைநிறுத்திய தனது படைகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக இரு நாடுகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், இரவு 7.30 மணி அளவில் படைகள் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 15-ம் தேதி, லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி பகுதியில், அத்துமீறி நுழைந்த சீனப் படைகள் அங்கேயே முகாம் அமைத்து தங்கியிருந்தன. இதைத்தொடர்ந்து இந்திய படைகளும் அங்கு குவிக்கப்பட்டன.
இதையடுத்து, சீன படைகள் வெளியேறுவது தொடர்பாக, இருநாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே 4 முறை கொடி அமர்வு கூட்டங்கள் நடைபெற்றது. ஆயினும் அதில் முடிவு எதுவும் எப்பப்படாத நிலையில் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் 9-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனா செல்கிறார். இதுபோல், சீன அதிபர் லீ வரும் 20-ம் தேதி இந்தியா வருகிறார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக