லண்டன்:இந்திய வம்சாவழியைச் சார்ந்த கவுன்சிலர் அப்துல் ரஸ்ஸாக் உஸ்மான் பிரிட்டனில் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சா வழியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் லீஸெஸ்டைர் நகரத்தில் தான் உஸ்மான் மேயராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவில் பிறந்த உஸ்மான், 1971-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு வந்தார். லீஸெஸ்டைரில் முதல் குடிமகனாக போகும் உஸ்மான், முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வகிக்க உள்ளார். ஹிந்து-சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் முன்னர் லீஸெஸ்டைர் மேயர் பதவியை வகித்துள்ளனர்.
1996-ஆம் ஆண்டு நகர கவுன்சிலரான உஸ்மான், ரோப்வானைத் தொடர்ந்து இப்பதவியில் அமர உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக