மும்பை:இயேசுவின் பெயரால் கற்பனையில் உருவான வடிவத்தை சிலையாக வடித்து அவரது போதனைக்கு முற்றிலும் மாற்றமாக வணங்கி வருகின்றார்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
இந்தியாவின் மும்பை நகரத்தில் உள்ள வேளாங்கண்ணி சர்ச்சில் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நிறுவப்பட்டுள்ள சிலையின் கால்களில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்ததாம். இதனைக்கண்ட அந்நகரின் கிறிஸ்தவர்கள் அதிசயித்துப் போனார்கள்.
இந்த நிகழ்வானது நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிலையின் பாதத்தை நோக்கி தினசரி குவியவைத்தது. இந்த தண்ணீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த தண்ணீரை சேகரித்துக் குடித்த பக்தர்கள் இதற்கு அற்புத சக்திகள் இருப்பதாக தெரிவித்தார்கள்.
மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை பலவகையான நோய்களையும் இந்த தண்ணீர் குணப்படுத்த வல்லது என்றெல்லாம் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலே இருந்தது.
இந்த நிலையில், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பத்திரிகையாளருமான சணல் எடமருகுவுக்கு மட்டும் இதில் சந்தேகம் எழுந்தது. கடவுள் அருள் என்பதை அவர் நம்பவில்லை. அந்த இடத்திற்கு நேரில் சென்ற அவர் அங்கே ஒருமணிநேரம் ஆய்வு செய்து ஒரு உண்மையை கண்டுபிடித்தார். அந்த சிலைக்கு அருகில் இருந்த கழிவறையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியதையும், அப்படி தேங்கிய தண்ணீரே இந்த சிலையின் கால் வழியாக கசிந்ததாக அவர் நிரூபித்தார்.
தனது இந்த கண்டுபிடிப்பை அறிவித்தபோது, கத்தோலிக்க மதத்தலைவர்கள், தனக்கு எதிராக மத நிந்தனை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு பதியுமாறு காவல்துறையிடம் கோரியதாக சணல் எடமருகு பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை இடமருகு சந்திக்கவேண்டும் என்றும் குறைந்தது கிறித்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியமைக்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஒரு சாரார் கோருகிறார்கள். ஆனால் மற்ற தரப்பினரோ, சணல் இடமருகு கூறும் எதிர்கருத்துக்களை விவாதிக்க மறுப்பதாக அவருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக