சனி, மே 19, 2012

கூடங்குளம் அணுமின்நிலையம்: எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டீஷ் எம்.பிக்கள் கடிதம்!

சென்னை:கூடங்குளம் அணுமின்நிலையத்தை  எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தும் வேளையில் இந்திய பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் அதுக்குறித்து எவ்வித கேள்விகளையும் எழுப்புவதில்லை. ஆனால், இந்திய எம்.பிக்களுக்கு இல்லாத அக்கறை பிரிட்டீஷ் எம்.பிக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தக் கோரி அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இங்கிலாந்து எம்.பி.க்கள் தமது கடிதத்தில், கூடங்குளம் சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சிறிய அளவில் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக் குறையாலும் கூடங்குளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர். மேலும் கூடங்குளத்தில் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் இங்கிலாந்து எம்.பிக்கள் தங்களது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக