சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஓடிசா மாநிலங்களில் மாவேயிஸ்டுகள் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. சமீபத்தில் சத்தீ்ஸ்கர் மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் மாவேயிஸ்டுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கியூ பிராஞ்ச் போலீசாரின் அதிரடி வேட்டையில் நக்சலைட்டு தீவிரவாத இயக்கத்தின் மாநில நிர்வாகி விவேக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை சென்னை ஷெனாய் நகரில் போலீசார் அவரை பிடித்தனர். திருக்கோவிலூரை அடுத்த அரண்டநல்லூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மத்திய உளவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
2002-ம் ஆண்டு பெரிய குளத்தில் போலீஸ் சூப்பிரண்டு பொன்.மாணிக்கவேல் நடத்திய அதிரடி வேட்டையின்போது விவேக் தப்பி ஓடினார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பிடியில் சிக்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக