சனி, மே 19, 2012

முதல்-மந்திரி பதவியை இனி கேட்க மாட்டேன்: எடியூரப்பா பேட்டி

எடியூரப்பா இன்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

கர்நாடக மாநில பா.ஜ.க.வில் ஒருமித்த கருத்து இல்லை. எனவே மும்பையில் வரும் 24, 25-ந்தேதிகளில் நடைபெற உள்ள பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.
குஜராத் முதல்-மந்திரி ( பயங்கிரவாதி)நரேந்திரமோடி மிக சிறப்பாக செயல்படுகிறார். அனைத்து தரப்பினரும் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். 


ஆனால் அவரை முன்னிலைப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் தயங்குகிறார்கள். எக்காரணத்தை கொண்டும் நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அது போல நான் பா.ஜ.க.வில் இருந்து விலகி வேறு கட்சிக்கும் செல்ல மாட்டேன். 



கர்நாடக முதல்-மந்திரி பதவி பற்றி இனி நான் பேசப் போவதில்லை. மாநில முதல்-மந்திரி பதவியையோ, மாநில தலைவர் பதவியையோ இனி நான் கேட்க மாட்டேன். 



இவ்வாறு எடிïரப்பா கூறினார். 



எடியூரப்பா போல குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியும் மும்பையில் நடைபெற உள்ள பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக