புதுடெல்லி:ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்யும் கச்சா எண்ணெயின் அளவை வெட்டிக் குறைக்க அமெரிக்கா இந்தியா மீது நிர்பந்தம் அளித்து வரும் சூழலில் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
ஈரானில் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பு(நாம்) மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நஜாத் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக விரைவில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹி டெல்லி வந்து பிரதமரைச் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழைத் தருவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்-இந்தியா இடையேயான உறவு கூடுதல் துறைகளில் பரவலாக்குவது குறித்து தொலைபேசியில் பேசியதாக நஜாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இந்தியா இடையே ஆழமான சகோதரத்துவத்திற்கு துல்லியமான உறவு நிலவுவதாகவும், அதனை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்றும் நஜாத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான உறவுக்கு இந்தியா முன்னுரை வழங்குவதாகவும், அவர்களுடன் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவோம் என்றும் மன்மோகன்சிங் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்யப்படும் எண்ணெயின் அளவை குறைத்து 15.5 மில்லியன் டன்னாக மாற்ற இந்தியா தீர்மானித்ததையடுத்து நஜாத் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் அழைத்துள்ளார். தேவையான சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயில் 80 சதவீதம் இந்தியா இறக்குமதிச் செய்கிறது. அதில் 12 சதவீதம் ஈரானில் இருந்தாகும்.
2011-2012 காலக்கட்டத்தில் 18.50 மில்லியன் எண்ணெய் இந்தியா ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்தது என்று பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அமெரிக்க ஸ்டேட்ஸ் செகரட்டரி ஹிலாரி கிளிண்டனின் இந்திய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்யும் எண்ணெயின் அளவை குறைப்பதாக இந்தியா அறிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக