அமெரிக்காவில் நடைபெறும் ஜி-8 உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த ஹாலந்த், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ராணுவத்தினரை வாபஸ் பெறும் முந்தைய தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரான்சு அதிபர் தேர்தலில் ஹாலந்தின் முக்கிய வாக்குறுதியே ஆப்கானில் இருந்து பிரஞ்சு படைகளை வாபஸ் பெறுவதாகும்.
நேட்டோ ஆக்கிரமிப்பு படையில் அங்கம் வகிக்கும் பிரான்சு ராணுவம், நேட்டோ கூட்டணியின் பொதுவான நிலைப்பாட்டிற்கு மாற்றமாக முன்னரே படையை வாபஸ் பெறுவது ஒபாமாவுக்கு பின்னடைவாகும்.
2014-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலும் வாபஸ் பெறப்போவதாக நேட்டோ அறிவித்திருந்தது. ஆனால், நேட்டோவில் அங்கமான பிரான்சு, நேட்டோ கூட்டணியின் பொதுவான நிலைப்பாட்டிற்கு ஒப்ப நிற்கும் என நம்புவதாக பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பாரக் ஒபாமா தெரிவித்தார்.
ஜி-8 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் இருவரும், யூரோசோனில் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் விவாதித்தனர். பிரச்சனைக்கு தீர்வு காண அவசர நடவடிக்கைகள் அத்தியாவசிமானது என்பதை இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக