பெஷாவர்: பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல நேட்டோ படைக்கு மீண்டும் பாக். தனது எல்லையை திறந்துவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகி்ஸ்தானின் வடக்கு வெஜிரிஸ்தானில் தலிபான் போராளிகள் மீது நேட்டோ படை வான் தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ஜவான்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இனி ஆப்கானிஸ்தானுக்கு பாக். வழியாக நேட்டோ படை செல்ல அனுமதிக்காமல் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தடை விதிக்கப்பட்டது.. கடந்த 6 மாத காலமாக பாக்.எல்லை மூடப்பட்ட நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த மாநாட்டின் போது அமெரிக்கா-பாக் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் அதிபர் சர்தாரி பாக்.கின் பெஷாவார் எல்லைப்பகுதியை நேட்டோ படை செல்ல அனுமதியளித்தார். இதன்படி நேற்று 5 கண்டெய்னர்களில் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்குள் பாக்.எல்லை வழியாக நுழைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக