டெல்லி மாணவி கற்பழிக்கபட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பான விவாதங்களும், கடும் கண்டனங்களும் எழுப்பப்பட்டன. அது குறித்து RSS இயக்க தலைவர் மோகன் பாகவத் திருவாய் மலர்ந்துள்ளார். அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை, இந்தியாவின் கிராமப் புறங்களிலோ, காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.
பேஷ்.... பேஷ் ... நன்னா இருக்கு! இப்படிபட்ட கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கொட்டான்களால் மட்டுமே சொல்ல முடியும். கற்பழிப்புகள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்குமாம் பரதத்தில் நடக்காதாம். அது என்ன பாரதம்! அது எங்கே இருக்கிறது? என்று கேட்க்காதீர்கள். இவர் இப்பொழுது வசிப்பது இந்தியாவிலா அல்லது இவர் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் கனவு கோட்டை பரதத்திலா.
வர்ணாசிரம அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்துவதில் RSSக்கு இணையாக வேறு யாரையும் இந்தியாவில் சொல்ல முடியாது. கிராமங்களில் கற்பழிப்பே நடக்காதாம் நகரங்களில்தான் நடக்குமாம். இவர் நிகழ்காலத்தில் வாழ்கிறாரா? இல்லை இறந்த காலத்தில் வாழ்கிறாரா?ஹரியானாவில் தலித் கிராமப்பெண்கள் உயர்ஜாதிகாரர்களால் கற்பழிப்பு, சத்திஸ்கரில் பழங்குடி பெண்கள் கற்பழிப்பு, அசாமில் ஆயுதப்படை நடத்திய கற்பழிப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கு கிராமங்களில் இந்திய ராணுவம் நடத்தும் கற்பழிப்பு இதுவெல்லாம் மோகன் பாகத்துக்கு தெரியாதா என்ன?
பழங்கால பாரத கலாசாரத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி வயிற்றில் புளியை வேறு கரைக்கிறார். பழங்கால பாரத கலாச்சாரம் என்றதும் உடன்கட்டை ஏறுவது, தேவதாசி முறை, பெண்கள் மேலாடை அணியக்கூடாது, தனி குவளை முறை, ஆகியவையே நினைவுக்கு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக