ஞாயிறு, ஜனவரி 20, 2013

பாக்.பிரதமரின் ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரி மரணம் !

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை விசாரித்த நேசனல் அக்கவுண்டபிலிட்டி பீரோவின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில் அவர் தங்கியிருந்த அரசு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.அந்த அதிகாரியின் பெயர் கம்ரான் பைஸல். 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு லஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார்.
கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று காவல்துறை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக