செவ்வாய், ஜனவரி 15, 2013

கொலை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடும் மைனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! - மத்திய அரசு கவலை !

டெல்லி மாணவி கேங் ரேப்பில் ஒரு இளம் குற்றவாளியும் இருப்பது தெரிந்த விஷ்யம்தான்.அது குறித்து டெல்லி மாணவியின் தாயார், ’என் மகளை
கொன்ற பாவிகளில் ஒருவனை மைனர் பையன் என்கிறார்கள். இரும்பு கம்பியால் என் மகளை தாக்கி இருக்கிறான் அவனா சிறுவன். அவனை தூக்கில் போட வேண்டும். அவன் மீது கருணை காட்டக்கூடாது”’ என்று ஆவேசத்துடன் கூறுகிறார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,”’மைனர்கள் எனப் படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறார்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகபட்சமாக 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன”’.என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக