தென்னாபிரிக்க கடற்கரையில் காணப்பட்ட முதலை ஒன்றின் தலையைப் பார்த்த பலர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்கள். சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இக் கடற்கரையில் இவர்கள் பார்த்து அதிர்ந்துபோனது முதலையின் தலையை அல்ல ! இவ்வளவு பெரிய முதலையை யார் இவ்வாறு துண்டாடி இருப்பார்கள் என்பது தான். தலையை வைத்துப் பார்க்கும்போது, சுமார் 8 அடி நீளமாக அம் முதலை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இம் முதலையின் தலை கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை இரண்டாகத் துண்டாடக்கூடிய கடல் இனம் யாது எனில், அது இராட்சத வெள்ளை சுறாக்கள் ஆகும். இந்த இராட்ச்சத வெள்ளை இனச் சுறா, 12 தொடக்கம் 20 அடி நீளம் வரை வளரக்கூடியவை. சில 20 அடிக்கு மேலும் வளரும். இவ்வகையான சுறாக்களே மனிதர்களைத் தாக்கி, உணவாக உண்ணுகிறது. இவ்வகையான சுறா இனமே இந்த முதலையை தாக்கியுள்ளது என தென்னாபிரிக்க சுற்றுலாப் பயணிகள் நம்புகிறார்கள். அவர்கள் இனி கடலில் இறங்கிக் குளிக்கவே அஞ்சும் நிலை தோன்றியுள்ளது. யானைக்கு நிலத்தில் பலம், ஆனல் அந்த யானை தண்ணீரில் இறங்கினால் முதலை இழுத்துச் சென்றுவிடும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட முதலையை இவ்வாறு கீறிக் கிழித்துள்ளது வெள்ளை இனச் சுறா. வல்லவனுக்கு வல்லவன் உலகில் உள்ளான் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக