புதன், ஜனவரி 16, 2013

பாக் அரசுக்கு எதிராக புரட்சி ! பார்லி முற்றுகைப் போராட்டத்தில் பெரும் வன்முறை!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில்
எடுத்திருக்கிறார். தாகீர் உல் காத்ரி தலைமையிலான தெக்ரீக் இ மின்ஹாஜுல் குரான் கட்சி, ஆளும் அரசு பதவி விலக வலியுறுத்தி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மிக பிரமாண்டமான 2 நாள் பேரணியை நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் பேசிய காத்ரி, தற்போது பேரணி முடிந்து விட்டது.

ஆனால் புரட்சி தொடங்கி விட்டது, பாகிஸ்தானில் நிலவும் லஞ்ச ஊழல், நேர்மையின்மை, தீவிரவாதம் போன்றவற்றுக்கு முடிவு ஏற்படும் வகையில் புரட்சி இருக்கும். இதனால் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் அஷ்ரப், அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம் பரிந்துரை செய்யவேண்டும். அதேபோன்று படுகொலைகள் பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாண சட்டசபைகளும் கலைக்கப்பட வேண்டும். இதற்கு கெடு விதிக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்த கெடுவை ஏற்று பலுசிஸ்தான் மாகாண அரசை மட்டும் அந்நாட்டு அரசு கலைத்திருக்கிறது. இந்நிலையில் இன்று மதகுரு தாகீர் உல் காத்ரீயின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர். ஆனால் அங்கு பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்ற சாலையில் ஒன்றுதிரண்ட அவர்கள் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. போலீசார் நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதானல் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாகீர் உல் காத்ரீயின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். 

ஆனால் அவர்கள் ஓய்வதாக இல்லை. மீண்டும் அதே பகுதியில் ஒன்று திரள வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து அகலவில்லை. இதனால் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நீடித்தே வருகிறது. பாராளுமன்ற சாலையில் திரண்ட ஆண்களும், பெண்களும் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை அமைதிப்படுத்த முயன்ற போலீசார் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சிறிது தூரம் கலைந்து ஓடிய மக்கள் மீண்டும் திரும்பி வந்து போலீசார் மீது கற்களை வீசினர். கலவரம் எல்லை மீறி போனதால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், கலைந்து செல்ல மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி பாராளுமன்ற சாலையில் குழுமியுள்ளனர். இதனால், அப்பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நீடித்தது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக