வெள்ளி, ஜனவரி 04, 2013

பலாத்காரங்கள் நடப்பது இந்தியாவில்தான், பாரதத்தில் அல்ல.. 'ஆர்.எஸ்.எஸ்' தலைவரின் அரவேகாட்டு பேச்சு !

பாலியல் பலாத்காரங்கள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்கின்றன, பாரதத்தில் இல்லை என்று படு தெளிவாக குழப்பியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். அஸ்ஸாம் மாநிலம் சில்சாருக்கு வந்த பகவத் அங்கு நடந்த கூட்டத்தில் பேசுகையில், இதுபோன்ற குற்றங்கள் மிகவும் அபூர்வமாகவே பாரதத்தில் நடக்கும். ஆனால் இந்தியவில் இது அடிக்கடி நடக்கும் செயலாகிவிட்டது. நீங்கள் கிராமங்களுக்கும் நம் நாட்டின் காட்டுப் பகுதிகளுக்கும் செல்லுங்கள். அங்கெல்லாம் இதுபோன்ற, குழுவாக பாலியல் பலாத்காரம்
செய்வது, அல்லது பாலியல் குற்றங்கள் இருக்கவே இருக்காது. ஆனால், மேற்கத்திய கலாச்சாரத்தில் திளைக்கும் நகர்ப்புறங்களில் கற்பழிப்புகள் சாதாரண விஷயமாகிவிட்டது. நாம் நவீன சட்டங்கள் இயற்றினாலும், பழைமையான பாரத பண்புக்கும் விழுமியங்களுக்கும் மதிப்பு கொடுத்து அவற்றின் அடிப்படையில் பெண்கள் மீதான பார்வையை அணுக வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்றார் அவர்.
இப்படி குழப்பி குழப்பியே இந்தியாவை நாசமா ஆகிடிங்கடா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக