அசாமில், திருமணமான பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த, காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.சிராங் மாவட்டத்தில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவர், விக்ரம் சிங் பிரம்மா. நேற்று முன்தினம் இரவில், வீடு புகுந்து, பெண் ஒருவரை கற்பழித்து விட்டார். நேற்று காலையில் இந்த விவகாரம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த வழியாக வந்த விக்ரம் சிங்கை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, தாக்க துவங்கினர்.தகவல் அறிந்து வந்த போலீசார், கும்பலில் சிக்கிய, காங்., பிரமுகரை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து, காங்., பிரமுகர் பிரம்மா, கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக