வெள்ளி, ஜனவரி 04, 2013

தமக்கு பின் ஸ்டாலின் தான்: பரபரப்பை ஏற்படுத்தினார் கருணாநிதி !

தமது இறப்பிற்கு பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை கோடிட்டுக் காட்டி திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.வேலூர் மாவட்ட பாமகவினர் இன்று கருணாநிதி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்தோரை வரவேற்றுப் பேசிய கருணாநிதி, தமது ஆயுள் உள்ளவரை தலித் சமுதாய மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். இந்தப் பணியில் எனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்பதில் அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரிடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமக்குப் பின்னால் ஸ்டாலின்தான் என்று கருணாநிதியே கூறியுள்ளது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறதே என்றே பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் இந்தப் பேச்சு மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக