ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், பிரணாப் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் எனக் கூறப்படுகிறது. இத்தகவலை தெரிவித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், ‘மொத்தம் நான்கு வேட்புமனுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேட்புமனுவையும் 50 பேர் முன்மொழிந்துள்ளனர். ஒவ்வொரு வேட்புமனுவுக்கும் பதில் வேட்பாளரும் தயார் செய்யப்பட்டுள்ளார்’ எனக் கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரது பெயர்கள் வேட்புமனுக்களை முன்மொழியவும், பதில் வேட்பாளர்களாகவும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக