வியாழன், ஜூன் 28, 2012

முர்ஸியின் பதவிப் பிரமாணம்:நிச்சயமற்ற நிலை தொடர்கிறது !

Where will Mursi be swornகெய்ரோ:அரசு உருவாக்கத்திற்கான தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் பதவிப் பிரமாணம் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.அடுத்த சனிக்கிழமை முர்ஸி அதிபராக பதவியேற்பார் என அல் அரேபியா சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இறுதி முடிவு ஏற்படவில்லை என்று ராணுவ அரசை மேற்கோள்காட்டி அல் மிஸ்ரி
அல்யவ்ம் பத்திரிகை கூறுகிறது.
அரசியல் சாசனமும், பாராளுமன்றமும் நிலவில் இல்லாத சூழலில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக பதவிப்பிரமாணம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை முர்ஸியின் செய்தித் தொடர்பாளர் யாஸர் அலி மறுத்துள்ளார்.
வாக்குச்சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஸி, பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்வார் என்று ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் இணையதளத்தில் யாஸர் அலி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முர்ஸி பதவிப்பிரமாணம் செய்தால், யதார்த்தத்தில் பாராளுமன்றத்தை கலைத்த ராணுவ அரசின் நடவடிக்கைக்கு உடன்பட்டார் என்றநிலை உருவாகும். இவ்விவகாரத்தில் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக இஃவானுல் முஸ்லிமீன் தலைமையும், ராணுவ அரசும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக