எகிப்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது முர்சிக்கு இந்தியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும் ,இருதரப்பு உறவை மேம்படுத்த தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், ‘எகிப்து தனது ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. எகிப்து மக்களின் தீர்ப்பை நாங்கள் மதித்து வரவேற்கிறோம். அந்நாட்டு மக்களுக்கும், புதிய அதிபர் முகமது முர்சிக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்’ என்றார்.
முர்சி கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அகமது ஷபிக்கை தோற்கடித்து வெற்றிபெற்றார். 60 வயதான முர்சிதான், ராணுவத் தளபதி அல்லாத முதல் எகிப்து அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக