சனி, ஜூன் 23, 2012

பாகிஸ்தான் அமெரிக்காவின் துப்பாக்கி – இம்ரான் கான் !

இஸ்லாமாபாத்:அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவு எஜமான்-அடிமை உறவைப் போன்றது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு இம்ரான் கான் அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவால்
வாடகைக்கு எடுக்கப்பட்ட துப்பாக்கிதான் பாகிஸ்தான். தனது எதிரிகளை கொன்றொழிக்க அமெரிக்கா, இந்த துப்பாக்கியைத்தான்(பாகிஸ்தான்) நம்பியுள்ளது.
உஸமா பின் லேடனை பாகிஸ்தானின் இறையாண்மையை மீறி கொலைச் செய்ததன் மூலம் அமெரிக்கா, பாகிஸ்தானை அவமதித்துள்ளது. உஸாமாவையும், அல்காயிதாவையும் பயிற்றுவித்து வளர்த்திய அமெரிக்கா பின்னர் செப்.11 தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கியை திருப்பி பிடித்துள்ளது.’ இவ்வாறு இம்ரான்கான் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக