வியாழன், ஜூன் 21, 2012

மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகிக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது !

Aung San Suu Kyi finally gets honorary doctorateமியான்மர் ஜனநாயக தலைவர், ஆங் சாங் சூகிக்கு, ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகம் நேற்று, கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
மியான்மர் நாட்டின், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர், ஆங் சாங் சூகி. கடந்த, 1990ம் ஆண்டு நடந்த, ஜனநாயக தேர்தலில், இவர் அமோக வெற்றி பெற்றும், ஆட்சியில் அமர விடாமல் வீட்டுச் சிறையில் அடைத்தது ராணுவ அரசு. பல ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூகி, தற்போது விடுதலையாகி, பார்லிமென்ட் எம்.பி., யாகியுள்ளார். இந்நிலையில், சூகி
வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது அவர் பிரிட்டனில் பயணித்து வருகிறார். லண்டனில், இவரது கணவர் மைக்கேல் ஆரிஸ், கடந்த, 1999ம் ஆண்டு, புற்றுநோயால் இறந்தார். நாட்டை விட்டுச் சென்றால், மீண்டும் தாயகம் திரும்ப முடியாது என்ற காரணத்தால், கணவரது இறுதிச் சடங்கில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை. நேற்று முன்தினம், அவர் தனது 67வது பிறந்த நாளை மகன் அலெக்சாண்டர் மற்றும் கிம்முடன் சேர்ந்து கொண்டாடினார். பிரிட்டன் பார்லிமென்டில் சூகி இன்று உரையாற்றுகிறார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனையும், இளவரசர் சார்லஸ், கமீலா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார். மியான்மர் ஜனநாயகத்துக்காக போராடும் சூகிக்கு, ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகம், கடந்த 93ம் ஆண்டு, கவுரவ டாக்டர் பட்டத்தை அறிவித்தது. ஆனால், அவர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், இந்த பட்டத்தை பெற முடியவில்லை. இந்நிலையில், நேற்று அவர், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில், கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று உரையாற்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக