ஊழல் குற்றச்சாட்டில், ருமேனிய முன்னாள் பிரதமருக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதால், அவர் தன்னைத் தானே சுட்டு, தற்கொலைக்கு முயன்றார்.
ருமேனியாவின் முன்னாள் பிரதமர் அட்ரியான் நாஸ்டேஸ்,62. இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். இவர் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும், பார்லிமென்ட் சபாநாயகராகவும் இருந் துள்ளார். உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடுகளில் ருமேனியாவும் ஒன்று என
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், அட்ரியான் தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான ஊழல்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியது. இதையடுத்து, அட்ரியான் தனது வீட்டில் நேற்று முன்தினம், துப்பாக்கியால் கழுத்தில் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவோடு இருப்பதாகவும், எனினும் பேசுவதில் சிரமம் உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ருமேனியாவின் தற்போதைய பிரத மர் விக்டர் பான்டா, புக்காரெஸ்ட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அட்ரியானின் உடல் நிலை குறித்து விசாரித் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக