வெள்ளி, ஜூன் 22, 2012

குவைத்:ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம் !

US plans significant military presence in Kuwaitவாஷிங்டன்:குவைத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தற்பொழுது 15 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் குவைத்தில் உள்ளனர். பிராந்தியத்தில் பிரச்சனைகள் உருவானால் உடனடியாக தலையிடுவதற்கு ஏதுவாக ராணுவத்தை நிறுத்துவது அவசியம் என அமெரிக்க செனட்டின் வெளியுறவு விவகார குழுவின்
புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முன்பு மேற்காசியா நாடுகளில் மொத்தம் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தினரின் 3 மடங்கு தொகையினர் தற்பொழுது குவைத்தில் உள்ளனர்.
கத்தர், யு.ஏ.இ, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தற்பொழுது அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக