சனி, ஜூன் 30, 2012

பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள் : மம்தா !

கொல்கத்தா: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 30 வரை குறையுங்கள், என மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் குறைத்துள்ளன. சென்னையில் லிட்டருக்கு ரூ.3.13 குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா
பானர்ஜி கூறியதாவது:
பெட்ரோல் விலை குறைப்பு வெறும் கண்துடைப்பு நாடகம். ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்திவிடுவார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ரூ.100க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதை கணக்கில் கொண்டால், பெட்ரோல் விலை இதைவிட கணிசமான அளவு குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக