வியாழன், ஜூன் 21, 2012

நிதிஷ்குமாரின் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்கே.. பிற்பகலில் அறிவிக்கிறார்-அதிர்ச்சியில் பாஜக !

 Presidential Poll Bjp Back Sangma டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு செய்துள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதே போல முகர்ஜிக்கே ஓட்டு என்று இன்னொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் அறிவித்துவிட்டது.இதனால் பாஜக கூட்டணி கலகலத்துப்
போயுள்ளது.
சங்மாவை ஆதரிப்பது குறித்து இன்று மாலைக்குள் பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
ஆனால், பிற்பகலில் தனியாக பிரஸ்மீட் வைத்துள்ளது ஐக்கிய ஜனதா தளம். அப்போது பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவு என்று அந்தக் கட்சி அறிவிக்கும் என்று தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலுடன் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐக்கிய ஜனதா தளம் விதித்துள்ளது.
மேலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களான நிதிஷ்குமாரும் சரத் யாதவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக