வியாழன், ஜூன் 21, 2012

ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் நடவடிக்கை: ஏப்ரல் மாதம் 74 அரசு அதிகாரிகளுக்கு தண்டனை !

CAKSKXDXபுதுடெல்லி:மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதம் 74 அரசு அதிகாரிகள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளும் உட்படுவர்.ஆணையத்தின் ஏப்ரல் மாத அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:அரசு ஊழியர்கள் மீது ஏப்ரல் மாதத்தில் 5,078 லஞ்சப் புகார்கள் வந்தன. அவற்றில் 39 புகார்கள், ஊழல் பற்றித் தகவல் தருபவர்கள் மூலம் பெறப்பட்டன. அவற்றின்
மீது நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், 74 அரசு அதிகாரிகளுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அலாகாபாத் வங்கியின் 8 அதிகாரிகள், பாரத ஸ்டேட் வங்கியின் 6 அதிகாரிகள், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் 4 அதிகாரிகள், இந்திய விவசாய ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த தலா 3 அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.
தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, மத்திய சுரங்கத் துறை, தொழிலாளர் நலத் துறை, மத்திய நேர்முக வரிகள் வாரியம், தில்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த தலா 2 அதிகாரிகள், மற்றும் கேந்ரிய வித்யாலயா சங்கதன், ஆந்திரா வங்கி, கனரா வங்கி ஆகியவற்றில் பணிபுரியும் தலா ஒரு அதிகாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கொள்முதல் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தொழில் நுட்பச் சோதனைப் பிரிவு ஆய்வு செய்து, ரூ.1.47 கோடியைப் பறிமுதல் செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக