வியாழன், ஜூன் 28, 2012

மியான்மர் தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது !

Suu Kyi to become honorary citizen of Parisமியான்மர் நாட்டின், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் அவுங் சாங் சூச்சி. கடந்த, 1990ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில், இவர் அமோக வெற்றி பெற்றும், ஆட்சியில் அமர விடாமல், வீட்டுச் சிறையில் அடைத்தது, ராணுவ அரசு. பல ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூச்சி, தற்போது விடுதலையாகி, பார்லிமென்ட் எம்.பி.,யாகியுள்ளார்.
மியான்மர் நாட்டில், ஜனநாயக
நடைமுறைகள் தலைகாட்டத் துவங்கியுள்ளதால், பல நாடுகள் பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள முன் வந்துள்ளன. இந்நிலையில், சூச்சி வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர், பிரான்ஸ் நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
லண்டனிலிருந்து நேற்று முன்தினம் ரயில் மூலம் பாரிஸ் வந்தடைந்த சூச்சிக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் தனது அரண்மனையில் விருந்தளித்தார். இதற்கிடையே பாரிசில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது வழங்கப்பட்டது. பாரிஸ் நகர மேயர் பெர்ட்ரான்ட் டிலானோ இதற்கான சான்றிதழை சூச்சிக்கு வழங்கினார்.
இதை தொடர்ந்து சூச்சிக்கு, பாரிஸ் நகர மேயர் மாளிகையில் மதிய விருந்தளிக்கப்பட்டது. பிரான்ஸ் படத்தயாரிப்பாளர் லுக் பெசன் என்பவர் சூச்சியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் "தி லேடி' என்ற திரைப்படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டார். இதற்காக இந்த விழாவில் சூச்சி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக