வியாழன், ஜூன் 28, 2012

மியான்மரில் இருந்து முஸ்லிம்களின் புலன் பெயர்வு தொடர்கிறது !

Boats carrying Rohingya Muslims from Myanmar, trying to cross the Naf river into Bangladesh
யங்கூன்:50க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு காரணமான வகுப்புவாத கலவரத்திற்கு பிறகு மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர். பெரும்பான்மை சமூகமான பெளத்தர்களின் தாக்குதலைத் தொடர்ந்து இவர்கள் தமது நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்துள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது. மியான்மரின்
மேற்கு மாவட்டமான ராக்கேனில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பெளத்தர்கள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். தமது பூர்வீக நாடான பங்களாதேஷிற்கு செல்ல அவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முயன்றபொழுது பங்களாதேஷின் கடலோர காவல்படை அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
ரோஹிங்கியா அகதிகளை அங்கீகரிக்க பங்களாதேஷுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்த போதிலும் தண்ணீரும், உணவும் அளித்துவிட்டு அவர்களை மீண்டும் கடலுக்கு ராணுவத்தினர் திருப்பி அனுப்புவதாக அல்ஜஸீரா கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக