புதன், ஜூன் 20, 2012

முபாரக் இறந்தாரா? உயிருடன் இருக்கின்றாரா? – குழப்பம் நீடிப்பு !

Dead or alive- Confusion over Mubarakகெய்ரோ:சிறையில் அடைக்கப்பட்டிருந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு மூளை செயல்பாடு நின்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியை விட்டு அகன்ற முபாரக், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு டோரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூளை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தெற்கு கெய்ரோவில் மாதி ராணுவ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று எகிப்து செய்தி நிறுவனமான MENA கூறுகிறது.
ஆனால் முபாரக் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் குறித்த செய்தி தவறு என்று ராணுவ தலைமை அறிவித்துள்ளது. முபாரக்கை மருத்துவமனையில் அனுமதித்த செய்தியை உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஃலா மஹ்மூத் உறுதிச் செய்தார்.
கடந்த ஜூன் 2-ஆம் தேதி எகிப்து மக்கள் புரட்சி போராட்டத்தின் போது 800 க்கும் மேற்பட்ட மக்கள் கொலைச் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் எகிப்து நீதிமன்றம் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக